புதுடெல்லி: ஏப்ரல் 2023-ல் அந்நிய நேரடி முதலீட்டு மேலாண்மைச் சட்டத்தின் கீழ் பிபிசி வேர்ல்ட் சர்வீஸ் இந்தியா மீதான விசாரணையை அமலாக்க இயக்குனரகம் தொடங்கியது. டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்திய இரண்டு மாதங்களுக்குப் பிறகு அமலாக்க இயக்குனரகத்தின் இந்த விசாரணை வந்தது. இதுகுறித்து நன்கு அறிந்தவர்கள் கூறுகையில், “இந்தியாவில் டிஜிட்டல் மீடியா மூலம் செய்தி மற்றும் நடப்பு நிகழ்வுகளை ஒளிபரப்பும் பிபிசி வேர்ல்ட் சர்வீஸ் இந்தியா, 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டு (எஃப்டிஐ) நிறுவனம். இந்நிலையில் பிபிசி தனது அன்னிய நேரடி முதலீட்டை 26 சதவீதமாக குறைக்கவில்லை.
இது இந்திய அரசின் விதிகளை முற்றிலும் மீறும் செயலாகும். மேலும் இது தொடர்பாக விளக்கம் கேட்டு அந்த நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது’’ என்றனர். விளம்பரம் இந்துதமிழ்20 பிப்ரவரி ஹிந்து தமிழ்20 பிப் இதையடுத்து, அன்னிய நேரடி முதலீட்டு மேலாண்மை சட்டத்தை மீறியதற்காக பிபிசி வேர்ல்ட் சர்வீஸ் இந்தியா நிறுவனத்துக்கு அமலாக்க இயக்குனரகம் அபராதம் விதித்துள்ளது. நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட மொத்த அபராதம் ரூ. 3,44,48,850. இதற்கிடையில், பிபிசி செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “இதுவரை, பிபிசி வேர்ல்ட் சர்வீஸ் இந்தியா மற்றும் அதன் இயக்குநர்கள் அமலாக்க இயக்குனரகத்திடம் இருந்து எந்த உத்தரவும் பெறவில்லை.
இந்தியா உட்பட பிபிசி செயல்படும் அனைத்து நாடுகளிலும் அங்குள்ள விதிகளின்படி செயல்பட உறுதிபூண்டுள்ளோம். விதிமீறல்கள் தொடர்பாக இதுபோன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டால், அவற்றை கவனமாக ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுப்போம்,” என்றார். முன்னதாக, 2002-ம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ராவில் ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் மற்றும் இந்தியாவில் சிறுபான்மையினரின் நிலை குறித்து பிபிசி ஆவணப்படம் தயாரித்தது.
மோடி கேள்வி’ என்ற தலைப்பில் ஆவணப்படம் தயாரிக்கப்பட்டு இரண்டு பாகங்களாக வெளியிடப்பட்டது. இந்த ஆவணப்படத்திற்கு பாஜக மற்றும் மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த ஆவணப்படத்தை இந்தியாவில் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பிப்ரவரி 2023-ல், இந்தியாவில் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.