டெக்சாஸ்: 2025-ம் ஆண்டு ஸ்பேஸ் எக்ஸ் ஸ்டார்ஷிப் ராக்கெட் சோதனையின் இரண்டாம் கட்ட சோதனை மீண்டும் தோல்வியில் முடிந்தது. ராக்கெட் புறப்பட்ட சில நிமிடங்களில் எண்ணற்ற துண்டுகளாக வெடித்தது. அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், விண்வெளி வீரர்களை நிலவில் தரையிறக்க அதிநவீன ஸ்டார்ஷிப் ராக்கெட்டை வடிவமைத்து பல்வேறு கட்டங்களில் சோதனை செய்து வருகிறது. ஜனவரி 17 அன்று, ஸ்டார்ஷிப் ராக்கெட் அதன் 7-வது சோதனை ஏவுதலின் போது நடுவானில் வெடித்தது.
இருப்பினும், விஞ்ஞானிகள் ராக்கெட்டின் பூஸ்டர் பகுதியை வெற்றிகரமாக தரையிறக்கினர். இந்நிலையில் அடுத்த கட்ட சோதனையாக அமெரிக்காவின் டெக்ஸ்-எக்ஸ் தளத்தில் இருந்து 403 அடி நீளம் கொண்ட ஸ்டார்ஷிப் ராக்கெட் ஏவப்பட்டது. இந்த ராக்கெட் மாதிரி செயற்கைக்கோளை சுமந்து சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ராக்கெட் ஏவப்பட்ட சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டு மையத்துடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

அப்போது ஸ்டார்ஷிப் ராக்கெட் நடுவானில் வெடித்து சிதறியது. ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் பாகங்கள் சிதறிக் கிடக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இருப்பினும், இந்த முறை ராக்கெட்டின் பூஸ்டர் பகுதி வெற்றிகரமாக தரையிறங்கியது. ஸ்டார்ஷிப் ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் முயற்சி மீண்டும் தோல்வியடைந்ததால் ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஸ்டார்ஷிப் ராக்கெட் வெடித்ததற்கான காரணங்களை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.