இன்று குரோதி வருடம், தை மாதம் 26ஆம் தேதி, சனிக்கிழமை. இந்த நாளில் சந்திர பகவான் மிதுன ராசியில் பயணம் செய்கிறார். சந்திரனின் இந்த நிலைமையால் சில ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும், சிலருக்கு சற்று கவனமாக இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.
இன்றைய திதி இரவு 09.55 வரை ஏகாதசி ஆகும். அதன் பிறகு துவாதசி திதி ஆரம்பமாகும். ஏகாதசி திதி மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. பக்தர்கள் இன்று விரதம் இருந்து வழிபாடு செய்தால் சிறப்பு பலன் கிடைக்கும்.நட்சத்திரப் பொருத்தம் பார்க்கும்போது, இன்று இரவு 07.47 வரை மிருகசீரிடம் நட்சத்திரம் உள்ளது. அதன் பிறகு திருவாதிரை நட்சத்திரம் தொடங்குகிறது.
இந்த இரண்டு நட்சத்திரங்களும் மிதுன ராசியில் உள்ளதால், இந்த ராசிக்காரர்கள் இன்று எந்த காரியத்தையும் கவனமாக மேற்கொள்ள வேண்டும்.விசாகம் மற்றும் அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது.
இதனால் இந்த நட்சத்திரக்காரர்கள் எந்த முக்கியமான முடிவுகளையும் இன்று எடுக்காமல் தவிர்ப்பது நல்லது. குடும்ப உறவுகளில் ஏற்பட்ட சிக்கல்களை சமாதானமாக தீர்ப்பது நல்லது.