கொல்கத்தாவில், பெண் பத்திரிகையாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மேற்கு வங்கத்தின் மூத்த மார்க்சிஸ்ட் தலைவர் தன்மோய் பட்டாச்சார்யா மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வட டம் டம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான இவர், தனது வீட்டுக்கு நேர்காணலுக்காக சென்ற பெண் பத்திரிகையாளரிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து பெண் பத்திரிக்கையாளர் சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கட்சி பேசாததற்கான காரணங்கள் குறித்து கேள்வி எழுப்பினார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை பட்டாச்சார்யா மறுத்துள்ளார்.
இதனிடையே பட்டாச்சார்யாவை சஸ்பெண்ட் செய்து விசாரணை நடத்தி வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. விசாரணைக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சலீம் கூறுகையில், “இந்த குற்றச்சாட்டுகளை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். இதுபோன்ற செயல்களை கட்சி ஆதரிக்காது. பட்டாச்சார்யா ஏன் அவரது வீட்டில் நேர்காணல் நடத்துகிறார்?” என்று கேள்வி எழுப்பினார்.