புதுடெல்லி: அமைச்சரின் சமூக ஊடகப் பதிவிற்குப் பதிலளிக்கும் வகையில் பயனர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். அந்த பயனரின் பதிவைப் பகிர்ந்த நிதியமைச்சர், “அவரது கருத்துக்கள் மதிப்புமிக்கவை, மக்களின் குரலுக்கு அரசாங்கம் செவிசாய்க்கிறது” என்றார்.
துஷார் ஷர்மா என்ற X பயனர், “நாட்டிற்கான உங்கள் பங்களிப்பையும் முயற்சிகளையும் நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம். மேலும் நீங்கள் எங்களின் மிகுந்த பாராட்டுக்களைப் பெற்றுள்ளீர்கள். நடுத்தர வர்க்கத்தினருக்கு நிவாரணம் வழங்குவதைக் கருத்தில் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இதில் உள்ள சவால்களை நான் புரிந்துகொள்கிறேன்.
ஆனால் இது ஒரு இதயப்பூர்வமான வேண்டுகோள்.” சர்மாவின் பதிவை டேக் செய்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதற்கு பதிலளித்தார். அதற்கு பதிலளித்த அமைச்சர், “உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் புரிதலுக்கும் நன்றி. நான் உங்கள் கவலையை உணர்கிறேன் மற்றும் உங்களை பாராட்டுகிறேன். பிரதமர் மோடியின் அரசு பதில் சொல்லக்கூடிய அரசு.
அது மக்களின் குரலுக்கு செவிசாய்க்கிறது. உங்கள் புரிதலுக்கு மீண்டும் நன்றி. உங்கள் கருத்து மிகவும் மதிப்புமிக்கது.” இவ்வாறு அமைச்சர் கூறினார். இந்திய நடுத்தர வர்க்கத்தினரை மிகவும் அச்சுறுத்திய பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் இந்த கோரிக்கை வந்துள்ளது.
சில்லறை பணவீக்கம் அக்டோபரில் 6.21 சதவீதமாக உயர்ந்துள்ளது. செப்டம்பர் மாதம் உணவுப் பணவீக்கம் 10.8 சதவீதமாக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.