புதுச்சேரி: புதுச்சேரி விடுதலை நாள் என்பதால் நவம்பர் 1-ம் தேதி ஏற்கனவே விடுமுறை; நவம்பர் 2-ம் தேதி கல்லறை நாள் மற்றும் 3-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அக்டோபர் 30-ம் தேதி முதல் நவம்பர் 3-ம் தேதி வரை மொத்தம் 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை கொண்டாட இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், மக்கள் சொந்த ஊர்களுக்கு வரத் தொடங்கியுள்ளனர். புதுச்சேரி அரசு, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் மக்களின் வசதிக்காக தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 1-ம் தேதியை பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், கடைசி நேர நெரிசலை தவிர்க்கும் வகையில், தீபாவளிக்கு முந்தைய நாளான அக்., 30-ம் தேதியும் புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அளித்து துணை நிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், பொதுப்பணித் துறை நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி விடுதலை நாள் என்பதால் நவம்பர் 1-ம் தேதி ஏற்கனவே விடுமுறை; நவம்பர் 2-ம் தேதி கல்லறை நாள் மற்றும் 3-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அக்டோபர் 30-ம் தேதி முதல் நவம்பர் 3-ம் தேதி வரை மொத்தம் 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், அக்டோபர் 30-ம் தேதி விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 16-ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.