பெங்களூருவில், கர்நாடக அரசு எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பி.யூ.சி பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு இலவசப் பஸ் பயணத்தை அறிவித்துள்ளது. மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக, அரசு மற்றும் அரசுடன் இணைந்த பள்ளிகளில் பயிலும் அனைவரும் இந்த சலுகையை பெறலாம்.
கர்நாடகாவில் 10ம் வகுப்பு மற்றும் பி.யூ.சி பொதுத் தேர்வுகள் மார்ச் 1ம் தேதி தொடங்கி ஏப்ரல் 4ம் தேதி வரை நடைபெறவுள்ளன. இதற்காக மாணவர்களுக்கு பயணத்திற்கான சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. தேர்வுக்கூடத்திற்குச் செல்லும் மாணவர்கள், தங்களது தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை கொண்டுசெல்வதன் மூலம் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்.
மாணவர்கள் தங்கள் வீட்டு பகுதியிலிருந்து தேர்வுக்கூடம் உள்ள இடம் வரை சாதாரண வகை பஸ்களில் பயணிக்கலாம். கூடுதல் பஸ் சேவை தேவைப்படின், அதற்கான கோரிக்கையை உரிய அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம். இது குறித்து கே.எஸ்.ஆர்.டி.சி நிர்வாகம், தேவைக்கேற்ப உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அறிவித்துள்ளது.