டெல்லி: மத்திய கல்வித்துறையில் இனி அமெரிக்க நிறுவனங்களின் சாப்ட்வேர்களை பயன்படுத்தக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களின் ஆபிஸ் சூட் சேவைகளை நிறுத்தி, அதற்கு பதிலாக இந்தியாவின் சொந்த தயாரிப்பான ZOHO Office Suite பயன்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் H1B விசா கட்டணத்தை உயர்த்தி, 50% வரி விதித்தது சிக்கலாக மாறியுள்ளது. இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி, “உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சுற்றறிக்கையில், “அனைத்து அதிகாரிகளும் ZOHO Writer, Zoho Sheet, Zoho Show, Zoho Workdrive போன்ற செயலிகளை பயன்படுத்த வேண்டும். வெளிநாட்டு சாப்ட்வேர்களை தவிர்க்க வேண்டும். இதனால் சுதேசி இயக்கத்தையும், இந்திய டிஜிட்டல் தொழிலையும் வலுப்படுத்த முடியும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே ரயில்வே, வர்த்தகத் துறை போன்ற அமைச்சகங்கள் ZOHO தயாரிப்புகளைப் பயன்படுத்த தொடங்கியுள்ளன. அந்த வரிசையில் தற்போது கல்வித்துறையும் முழுமையாக ZOHO-வுக்கு மாறுகிறது. தமிழ்நாட்டை மையமாகக் கொண்டு செயல்படும் ZOHO நிறுவனத்திற்கு இது பெரிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.