கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று தமிழ்நாடு தீப்பெட்டித் தொழிலின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-
இந்த முறை ஜிஎஸ்டியில் எந்த சீர்திருத்தங்களும் செய்யப்படவில்லை. ஒரு புரட்சி செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய மாற்றத்தை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். 375 பொருட்களின் விலைகள் குறைந்துள்ளன.

10 சதவீதம் குறைத்துள்ளோம். 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும், 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் கிடைக்கும் பலன் மக்களுக்கு சேமிப்பு. வரி குறைப்பால் கிடைக்கும் சேமிப்பை குடும்ப நலனுக்காக பயன்படுத்துங்கள் என்று அவர் கூறினார்.