பெங்களூரு: கடந்த 2024-25 நிதியாண்டில், விஜயகுமாருக்கு ரூ.94.6 கோடி சம்பளம் வழங்கப்பட்டது. இதில் ரூ.15.8 கோடி அடிப்படை சம்பளமும் ரூ.13.9 கோடி செயல்திறன் அடிப்படையிலான போனஸும் அடங்கும். அவரைத் தொடர்ந்து இன்ஃபோசிஸ் CEO சலீல் பரேக்கின் சம்பளம் 22 சதவீதம் அதிகரித்து ரூ.80.6 கோடியாகவும், விப்ரோ CEO நிவாசா பாலியா ரூ.53.6 கோடியாகவும் சம்பாதித்துள்ளார்.
TCS CEO K. கிருத்திவாசன் 2023-24-ல் ரூ.26.5 கோடி சம்பாதித்தார். HCL Tech நிறுவனத்தின் ஆண்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளபடி, கடந்த நிதியாண்டில் விஜயகுமாரின் சம்பளம் முந்தைய நிதியாண்டை விட 7.9% அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், நிர்வாகமற்ற ஊழியர்களுக்கான சராசரி சம்பள உயர்வு 3.1% மட்டுமே. தலைமை நிர்வாக அதிகாரி விஜயகுமாரின் சம்பளம் ஊழியர்களின் சராசரி சம்பளத்தை விட 662.5 மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது.
விஜயகுமார் இந்த ஆண்டு செப்டம்பர் 1 முதல் மார்ச் 31, 2030 வரை HCL Tech நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.