புதுடெல்லி: வழிபாட்டு தலங்கள் சட்டத்திற்கு எதிரான மனுக்களை வரும் 12-ம் தேதி சிறப்பு அமர்வு விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு விதிகள்) சட்டம் 1991-ல் நிறைவேற்றப்பட்டது. அதன்படி 1947 ஆகஸ்ட் 15-க்கு முன் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த சட்டத்தை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், “அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சமான நீதித்துறை மறுஆய்வுத் தீர்மானத்தை இந்தச் சட்டம் தடுக்கிறது. இது மதச்சார்பின்மை கொள்கையை மீறுகிறது. இந்த மனுக்களுக்கு, 2021-ல் பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
அதன் பின், மத்திய அரசு, பலமுறை அவகாசம் கோரியதால், இந்த மனு மீதான விசாரணை, தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கு மத்திய அரசு இதுவரை பதில் அளிக்கவில்லை. இந்நிலையில் வழிபாட்டு தலங்கள் சட்டத்திற்கு எதிரான மனுக்களை வரும் 12-ம் தேதி சிறப்பு அமர்வு விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் கே.வி. விஸ்வநாதன் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான இந்த சிறப்பு பெஞ்சில் ஆஜராவார்.