ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த சம்பய் சோரன் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன், பணமோசடி வழக்கில் அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டதை அடுத்து, சம்பய் சோரன் முதல்வராக பதவியேற்றார். கடந்த வாரம் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதையடுத்து, அவர் மீண்டும் முதல்வராக பதவியேற்க உரிமை கோரியுள்ளார்.
தற்போதைய முதல்வர் சாம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து மூன்றாவது முறையாக ஹேமந்த் சோரன் முதல்வராக பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் பதவியேற்பு விழா இன்னும் சில நாட்களில் நடைபெறும் என கூறப்படுகிறது.
மேலும் சம்பய் சோரனின் ராஜினாமாவுக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.