டெல்லி: கடந்த 3 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு ரூ. 258 கோடி. குறிப்பாக, ஜூன் 2023-ல் அவர் மேற்கொண்ட அமெரிக்கப் பயணத்துக்கான செலவு மட்டும் ரூ. 22.89 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடி கடந்த 3 ஆண்டுகளில் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களின் செலவு விவரங்களை வெளியிட வேண்டும் என கேள்வி எழுப்பினார்.

வெளியுறவுத் துறை இணை அமைச்சர் பபித்ரா மார்கெரிட்டா எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், 2022 மே முதல் 2024 டிசம்பர் வரை பிரதமர் மேற்கொண்ட 38 வெளிநாட்டுப் பயணங்களின் செலவு விவரங்களை அளித்துள்ளார். இந்த 3 ஆண்டுகளில் பிரதமர் மோடி மேற்கொண்ட பயணங்களின் மொத்த செலவு ரூ. 258 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஜூன் 2023-ல் அமெரிக்க பயணத்திற்கான செலவு மட்டும் ரூ. 22.89 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்க பயணத்திற்கு ரூ. 15.33 கோடி செலவாகி இருக்கிறது. 2023-ல் ஜப்பான் பயணத்திற்கு ரூ. 17.19 கோடி, மற்றும் 2022-ல் நேபாள பயணத்திற்கு ரூ. 80 கோடி என்று கூறப்படுகிறது.