புதுடில்லி: துணை முதல்வர் சென்ற விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இருப்பினும் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
டெல்லியிலிருந்து இமாச்சலப் பிரதேச மாநிலம் சிம்லாவுக்குச் இன்று காலை சென்ற அலையன்ஸ் ஏர் விமானம் தரையிறங்கும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இமாச்சலப் பிரதேச துணை முதல்வர் முகேஷ் அக்னிஹோத்ரி உட்பட 44 பயணிகளும் விமானத்தில் இருந்தனர்.
தொழில்நுட்ப சிக்கல் காரணமாக தரையிறங்கும் விமானத்தின் வேகத்தை குறைக்க முடியவில்லை. இதனால் விமானம் ஓடுபாதையில் வளைந்து வெகு தூரம் சென்றது. விமானி உடனடியாக அவசரகால பிரேக்குகளைப் பயன்படுத்தி விரைவாக செயல்பட்டதால் பெரிய அளவிலான விபத்து தவிர்க்கப்பட்டது.
விமானத்தில் இருந்த துணை முதல்வர் உட்பட 44 பயணிகளும் பத்திரமாக இருப்பதாக சிம்லா விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தர்மசாலாவுக்குச் செல்ல திட்டமிடப்பட்ட விமானம் ரத்து செய்யப்பட்டது