
வரலாற்றாசிரியர் விக்ரம் சம்பத் எழுதிய ‘திப்பு சுல்தான்: தி சாகா ஆஃப் மைசூர் இன்டர்ரெக்னம் 1761 – 1799’ புத்தகத்தை வெளியிட்டு, நமது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசுகையில், “எல்லா சமூகங்களிலும் வரலாறு சிக்கலானது.
இது பெரும்பாலும் அரசியல் சூழ்நிலையின் நேர்மறையான அம்சங்களை மட்டுமே எடுத்துக்காட்டுகிறது. திப்பு சுல்தான் விஷயத்திலும் அப்படித்தான் நடந்திருக்கிறது.
மேலும், “இந்திய வரலாற்றில் திப்பு சுல்தான் ஒரு சிக்கலான ஆளுமை. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த முக்கிய நபராக அவர் புகழ் பெற்றிருந்தாலும், சில இடங்களில் பாதகமான உணர்வுகளைத் தூண்டியவராகவும் கருதப்படுகிறார்.”