திருப்பதி: ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலிருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் திருவண்ணாமலைக்கு ஆன்மீக பயணம் மேற்கொள்கின்றனர். அவர்கள் ஹைதராபாத்திலிருந்து ஸ்ரீசைலம், ஸ்ரீ காளஹஸ்தி, திருப்பதி, காணிப்பாக்கம் விநாயகர் கோயில் வழியாக வேலூர் தங்கக்கோயில் மற்றும் திருவண்ணாமலையை அடைகிறார்கள். பின்னர் அவர்கள் கிரிவலம் சென்று, இறைவனை வழிபட்டு வீடு திரும்புகிறார்கள்.
பக்தர்களின் நலனுக்காக, ஹைதராபாத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு திருப்பதி, காட்பாடி, திருவண்ணாமலை வழியாக 8 சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு மத்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. அதன்படி, ஜூலை 2 முதல் 25 வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

சிறப்பு ரயில் எண் 07230 ஜூலை 2-ம் தேதி மாலை 5.20 மணிக்கு ஹைதராபாத்தில் இருந்து புறப்பட்டு, செகந்திராபாத், நல்கொண்டா, குண்டூர், கூடுரு, ரேணிகுண்டா, திருப்பதி, பாகாலா, சித்தூர், காட்பாடி, திருவண்ணாமலை வழியாக ஜூலை 3-ம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு கன்னியாகுமரியை சென்றடையும்.
அதே ரயில் (எண். 07229) ஜூலை 4-ம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை 5.15 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு, அதே பாதை வழியாக 5-ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு ஹைதராபாத்தை அடைந்துவிடும் என்று தெற்கு மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஸ்ரீதர் தெரிவித்தார்.