மேற்கு வங்க சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் திங்கட்கிழமை தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில், பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து அவையில் சலசலப்பை ஏற்படுத்திய எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி மற்றும் 3 பாஜக எம்.எல்.ஏ.க்கள் அவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். அதன் பின்னர், சுவேந்து அதிகாரி மேற்கு வங்கத்தில் இந்து எதிர்ப்பு அரசு நடைபெறுவதாகவும், மம்தா பானர்ஜி முஸ்லிம் லீக் தலைவரை போல நடந்து கொண்டதாகவும் குற்றம் சாட்டினார்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த மம்தா பானர்ஜி, தீவிரவாதிகளுடன் தொடர்பு என்ற குற்றச்சாட்டுகள் கேட்கப்படுவதை விட சாவதே மேல் என வருந்தினார். குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் பதவி விலக தயாராக இருப்பதாகக் கூறினார். மேலும், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதாகவும் தெரிவித்துள்ளார்.
தான் ஒரு பிராமணர் என்றும், பெருமைமிக்க இந்து எனவும் கூறிய மம்தா பானர்ஜி, தன்னை முஸ்லிம் லீக் தலைவர் என அழைத்தவர்கள் தேர்தல் நேரத்தில் அவர்களின் உதவியை பெற்றதாகவும் கூறினார்.