சத்தீஸ்கர்: சத்தீஸ்கரில் 2 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள கிஸ்தாராம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த பகுதியில் பதுங்கியிருந்த நக்சலைட்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இதில், 2 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து அங்கு, தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.