மத்தியப் பிரதேசத்தில் பதரியா நகரைச் சேர்ந்த பிரின்ஸ் சுமன், முட்டை விற்பனையாளராக இருக்கிறார். அவருக்கு ஜிஎஸ்டி பாக்கி ரூ.6 கோடி இருப்பதாக வருமான வரி துறையினரிடமிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டில், ‘பிரின்ஸ் எண்டர்பிரைசஸ்’ என்ற நிறுவனம் டெல்லியில் பதிவு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிறுவனம் பெரிய பரிவர்த்தனைகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

சுமனின் தந்தை, “நம்மிடம் ரூ.50 கோடி இருந்தால், ஏன் சிரமப்படுவோம்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், சுமனின் வழக்கறிஞர், “பிரின்ஸ் ஆவணங்களை மோசடியாகப் பயன்படுத்தியவர்கள் உள்ளனர்” என கூறியுள்ளார்.
மேலும், உத்தரப்பிரதேசம், அலிகாரில் ஜூஸ் விற்பனையாளரான எம்.டி. ரஹீஸுக்கும், ரூ.7.5 கோடி ஜிஎஸ்டி பாக்கி உடன் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ரஹீஸ், “நான் ஜூஸ் மட்டுமே விற்கிறேன், இவ்வளவு பணம் நான் பார்த்ததில்லை” எனக் கூறியுள்ளார். 2022 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்கான நன்கொடை தொடர்பாக ரஹீஸின் ஆவணங்கள் மோசடியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.