புதுடில்லி: வங்கிகள் மீது புகார்கள் அதிகரித்து வருகின்றன என்று ரிசர்வ் வங்கி அதிருப்தி தெரிவித்துள்ளது.
வங்கிகள் மீது புகார்கள் அதிகரித்து வருவதாக, ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அதிருப்தி தெரிவித்துள்ளார். வங்கி சேவைகள் குறித்து சமூகவலைதளங்களில் வாடிக்கையாளர்கள், தங்களுக்கு ஏற்பட்ட சிரமங்களை புகாராக பதிவு செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வங்கி அதிகாரிகள், நிர்வாகத்தினர் நினைத்தால் இதற்கு எளிதாகத் தீர்வு காண முடியும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.