புதுடில்லி: 2024ம் ஆண்டில் இந்தியாவில் 18,200 ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இது 2023 ஆண்டின் வெகுவாக அதிகமாகும். உலகளவில் 100க்கும் மேற்பட்ட அமைப்புகளின் கூட்டு ஆய்வின் அடிப்படையில் இந்த தரவுகள் வெளியிடப்பட்டன.

குளோபல் பாரஸ்ட் வாட்ச் மற்றும் மேலிலாண்ட் பல்கலைக்கழகம் ஆகிய அமைப்புகளின் தரவுகளின்படி, 2001ம் ஆண்டு முதல் 23.1 லட்சம் ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதோடு, 7.1 சதவீதம் மரவளம் குறைந்துள்ளது. இதனால் 1.29 ஜிகாடன் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றப்பட்டுள்ளதாக ஆய்வு காட்டுகிறது.
இந்தியாவில் 2002ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை 3,48,000 ஹெக்டேர் ஈரப்பதமான முதன்மை காடுகள் (5.4%) இழந்துள்ளன. அதே காலகட்டத்தில், மொத்த மரவள இழப்பு 15 சதவீதமாக உள்ளதாகவும், இது காடுகள் அழியும் சம்பவத்தை மிகவும் ஆபத்தாகச் செய்யும் என்பதை உணர்த்துகிறது.
முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், 2022ல் 16,900 ஹெக்டேர், 2021ல் 18,300 ஹெக்டேர், 2020ல் 17,000 ஹெக்டேர் மற்றும் 2019ல் 14,500 ஹெக்டேர் ஈரப்பதமான முதன்மை காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. 2024 இல் மிக அதிகமான காடுகள் அழிந்திருப்பது, சர்வதேச அளவில் பருவமழை மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு எதிரான போராட்டத்தின் தேவையை மீண்டும் முன்வைக்கிறது.