வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.61.50 ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப, ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது.
அந்த வகையில், ஒவ்வொரு மாதமும், 1ம் தேதி, எண்ணெய் நிறுவனங்கள், புதிய விலையை நிர்ணயம் செய்து, அறிவிக்கின்றன. பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில், பாரத் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆயில் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோவும், வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோவும் கொண்ட சமையல் காஸ் சிலிண்டர்களை விநியோகம் செய்கின்றன.
அதன்படி, இந்த மாதத்துக்கான திருத்தப்பட்ட விலைப்பட்டியலின்படி, 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.61 50 உயர்ந்து ரூ.1964.50 ஆக உள்ளது. ஆனால், வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.818.50 ஆக இருக்கும் என பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.