புது டெல்லி: 2020-ம் ஆண்டு, கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் சீன துருப்புக்கள் இந்திய துருப்புக்களைத் தாக்கின. இதைத் தொடர்ந்து, இந்திய அரசு சீன டிக்டாக் செயலியை தடை செய்தது.
இதற்கிடையில், இந்தியா டிக்டாக் மீதான தடையை நீக்கியதாக நேற்று மாலை முதல் செய்தி வெளியானது. டிக்டாக் அல்லது அதன் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் இது தொடர்பாக இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இந்த சூழலில், டிக்டாக் மீதான தடையை நீக்க இந்திய அரசு எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்றும், அத்தகைய எந்தவொரு அறிக்கையோ அல்லது செய்தியோ தவறானது என்றும், பொதுமக்களை தவறாக வழிநடத்தும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.