புதுடெல்லி: சுற்றுலா, தொழில், வேலைவாய்ப்பு, கல்வி என பல்வேறு காரணங்களுக்காக அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஏராளமான இந்தியர்கள் அமெரிக்காவுக்கு விசா கேட்டு விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் நேற்று 1 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்களுக்கு அமெரிக்க அரசு விசா வழங்கியுள்ளது.
இது நிரந்தரமற்ற குடியுரிமை விசா. இந்த வகையான விசாக்கள் H1-B விசாக்கள் என்று அழைக்கப்படுகின்றன. கடந்த நான்கு ஆண்டுகளாக அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு, அமெரிக்க அரசு இந்தியர்களுக்கு 1 மில்லியனுக்கும் அதிகமான விசாக்களை வழங்கியது.
இந்நிலையில், தொடர்ந்து 2-வது ஆண்டாக இந்தியாவுக்கு 1 மில்லியனுக்கும் அதிகமான விசாக்களை வழங்க அமெரிக்க அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு 3.31 லட்சம் மாணவர்கள் அமெரிக்கா செல்ல விசா கோரி விண்ணப்பித்துள்ளனர். இதன் மூலம் அமெரிக்காவுக்கு அதிக மாணவர்களை அனுப்பும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.