புதுடெல்லி: உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடான இந்தியாவில் நிலக்கரி முக்கிய எரிசக்தி ஆதாரமாக உள்ளது. பல்வேறு தொழில்களில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியாவில் கடந்த நிதியாண்டில் (ஏப்ரல் 2023 – மார்ச் 2024) மொத்தம் 997.83 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டது.

தற்போது, நடப்பு நிதியாண்டில், 11 நாட்களுக்கு முன், மார்ச், 20-ல் (நேற்று முன்தினம்), நிலக்கரி உற்பத்தி, 1 பில்லியன் டன்னை தாண்டி, புதிய மைல்கல்லை ஏற்படுத்தியுள்ளதாக, மத்திய நிலக்கரி அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்திருந்தார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில், “1 பில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி என்ற மிகப்பெரிய மைல்கல்லை கடந்தது மிகப்பெரிய சாதனை.
இது இந்தியாவுக்கு பெருமை தரும் தருணம். இது எரிசக்தி பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் தன்னிறைவு கொண்ட இந்தியாவுக்கான நமது அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது” என்று கூறியுள்ளார்.