புது டெல்லி: இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா ஜூன் 8-ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்கிறார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் சுபன்ஷு சுக்லா (40). இந்திய விமானப்படை விமானியான இவர், இஸ்ரோவின் ககன்யான் திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்காக, 2019-ம் ஆண்டு ரஷ்யாவில் உள்ள யூரி காகரின் விண்வெளி மையத்தில் சிறப்புப் பயிற்சி பெற்றார்.

இந்த சூழலில், அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, ஸ்பேஸ்எக்ஸின் டிராகன் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 4 விண்வெளி வீரர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதில் இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லாவும் இடம்பெற்றுள்ளார். 29-ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 4 விண்வெளி வீரர்களை அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
இப்போது பயணத் திட்டம் ஜூன் 8-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்று சுபான்ஷு சுக்லா உட்பட 4 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்வார்கள் என்று நாசா அறிவித்துள்ளது.