வாஷிங்டன்: அமெரிக்காவில் சூரிய சக்தி ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக தொழிலதிபர் அதானி இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் நியூயார்க் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

அந்த அறிக்கையில், தொழிலதிபர் அதானிக்கு அழைப்பாணை அனுப்பாமல் இந்திய அதிகாரிகளை தாமதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே, இந்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து அதானியை முறையாக அழைப்பாணை அனுப்பி விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நியூயார்க் நீதிமன்றம் பொருத்தமான உத்தரவை பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.