மும்பை: பஞ்சாப் நேஷனல் வங்கியைத் தொடர்ந்து, சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பை பராமரிக்காததற்கு அபராதம் விதிக்கப்படாது என்று இந்தியன் வங்கி அறிவித்துள்ளது. நாட்டில் உள்ள ஒவ்வொரு வங்கிக் கணக்கிற்கும் குறைந்தபட்ச இருப்பை பராமரிப்பது அவசியம்.
இது பராமரிக்கப்படாவிட்டால், வங்கிகள் அதற்கு தனி அபராதம் விதிக்கின்றன. இந்த நடவடிக்கை வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய சுமையாகும். இந்த சூழ்நிலையில், பிரபல பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்கப்படாவிட்டாலும் எந்த அபராதமும் கழிக்கப்படாது என்று அறிவித்துள்ளது.

இந்த புதிய நடைமுறை ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. பெண்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு பயனளிக்கும் வகையில் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது.
இதேபோல், அனைத்து சேமிப்புக் கணக்குகளிலும் குறைந்தபட்ச இருப்புத்தொகை கட்டணத்திற்கு அபராதம் வசூலிக்கும் முறை ரத்து செய்யப்படுவதாக இந்தியன் வங்கி அறிவித்துள்ளது. இந்த நடைமுறை ஜூலை 7 முதல் அமலுக்கு வருகிறது.