சீனா: கார் பயணம் பிரபலம்… உலக தலைவர்களுடனான பிரதமர் மோடியின் கார் பயணம் பிரபலமாகி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் மோடியும், ரஷிய அதிபர் புதினும் காரில் ஒன்றாக பயணம் செய்தனர்.
அதேபோல் சமீபத்தில் புதின் இந்தியா வந்தபோது அவரை பிரதமர் மோடி விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்றார். அப்போது இரு தலைவர்களும் காரில் ஒன்றாக புறப்பட்டு சென்றனர். இதுதொடர்பான புகைப்படங்கள் வைரலானது.
இதற்கிடையே நேற்று முன்தினம் பிரதமர் மோடி ஜோர்டான் நாட்டுக்கு சென்றார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அப்போது மோடியை ஜோர்டான் பட்டத்து இளவரசர் அல் ஹுசேன் பின் அப்துல்லா காரில் அருங்காட்சியகத்துக்கு அழைத்துச் சென்றார்.
அந்த காரை பட்டத்து இளவரசர் ஓட்டி சென்றார். அதேபோல் ஜோர்டான் பயணத்தை முடித்துக்கொண்டு எத்தி யோப்பியாவுக்கு மோடி சென்றபோது அவரை விமான நிலையத்தில் எத்தியோப்பியா பிரதமர் அபிய் அகமது அலி வரவேற்றார். பின்னர் மோடியை அவர் தங்கும் ஓட்டலுக்கு காரில் எத்தியோப்பியா பிரதமர் அழைத்து சென்றார். இந்த இரு தலைவர்களுடன் மோடி காரில் பயணிக்கும் புகைப்படங்கள் வெளியாகின.
தற்போது உலக தலைவர்களுடன் மோடி ஒன்றாக காரில் பயணிப்பது பிரபலமாகி வருகிறது.