இந்தியாவில் டெல்லியில் ஒரு வருடத்தில் திருமணங்களுக்கு மட்டும் ரூ.10.84 லட்சம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் திருமணங்களுக்கு சராசரியாக 12.5 லட்சம் ரூபாய் செலவிடப்படுவதாக தனியார் நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. நாட்டின் தனிநபர் வருமானம் ரூ. 2.40 லட்சம், இந்தியர்கள் திருமணங்களுக்கு அதை விட 5 மடங்கு அதிகமாக செலவிடுகின்றனர்.
இந்திய திருமணச் செலவுகளில் 25% தங்க நகைகளுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. நகைச் சந்தையில் 50% திருமணத்துக்கானது. இந்தியர்கள் ரூ. 3.33 லட்சம் கோடி செலவிடப்படுகிறது.
நகைகளுக்கு அடுத்தபடியாக திருமண விழாக்களில் உணவுக்கு சராசரியாக ரூ. 2.16 லட்சம் கோடி செலவிடப்படுகிறது. இந்தியர்கள் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள், நலங்கு, மெகந்தி, வரவேற்பு போன்றவற்றுக்கு ரூ.1.66 லட்சம் கோடியும், புகைப்படம் எடுப்பதற்காக ரூ.1 லட்சம் கோடியும் செலவிடுகின்றனர்.
இந்தியாவில் விற்கப்படும் ஆடைகளில் 10% திருமணத்திற்காக வாங்கப்படுகிறது. இதற்காக இந்தியர்கள் ரூ.83,000 கோடி செலவிடுகின்றனர். இந்தியாவில், உணவு மற்றும் மளிகைப் பொருட்களுக்கு அடுத்தபடியாக, திருமணங்களின் வியாபாரம் மட்டும், ஒரு வருடத்தில், 10.80 லட்சம் கோடி ரூபாய்.
உலகிலேயே இந்தியாவில்தான் அதிக எண்ணிக்கையிலான திருமணங்கள் ஆண்டுதோறும் 80 லட்சம் முதல் 1 கோடி வரை நடைபெறுகின்றன.
சீனாவில் 70 முதல் 80 லட்சம் திருமணங்களும், அமெரிக்காவில் 20 முதல் 25 லட்சம் திருமணங்களும் நடக்கின்றன. ஆனால் திருமண வர்த்தகத்தில் சீனா முதலிடத்தில் உள்ளது.
சீனாவில் திருமண வியாபாரத்தின் மதிப்பு மட்டும் ரூ.14.18 லட்சம் கோடியாகவும், இந்தியாவில் ரூ.10.84 லட்சம் கோடியாகவும் உள்ளது. அமெரிக்காவில் திருமண வியாபாரம் ரூ.5.84 லட்சம் கோடி.
உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில், குழந்தைகளின் கல்வியை விட இந்தியர்கள் மட்டுமே இரு மடங்கு திருமணங்களுக்கு செலவிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.