டெல்லி: பிரதமர் மோடியின் 11 ஆண்டுகால ஆட்சியில் இந்தியா சீரழிந்துவிட்டது என்று காங்கிரஸ் நிர்வாகி இம்ரான் மசூத் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில்; நாம் உலக குருவாக மாறப் போகிறோம் என்று சொல்கிறார்கள், ஆனால் நாட்டின் ஏற்றுமதி ஏன் குறைந்துள்ளது? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

வேலைவாய்ப்புகளைப் பற்றிப் பேசும் பாஜக அரசின் கீழ் இளைஞர்கள் வேலையின்றி சிரமப்படுகிறார்கள். பாஜக அரசு அரசு வேலைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகவும், ஆளும் பாஜக விவசாயிகளின் நிலை குறித்துப் பேசுவதில்லை என்றும்; விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.