வாஷிங்டன்: உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்திர கூட்டங்கள் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா கூறுகையில், உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் வளர்ச்சி மிகவும் சிறப்பாக உள்ளது என்பதில் சந்தேகமில்லை.
பொருளாதார வளர்ச்சி விகிதத்தை 7 சதவீதம் அல்லது அதற்கு மேல் அடைய பல்வேறு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவின் அதிக வளர்ச்சி விகிதத்திற்கு உள்நாட்டு சந்தையும் மிக முக்கிய காரணம்.
சுத்தமான காற்று, ஆரோக்கியமான குடிநீர், மக்களின் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றில் இந்தியா அதிக கவனம் செலுத்த வேண்டும். இவற்றை உள்ளடக்கிய நகர்ப்புற திட்டப் பணிகளை பிரதமர் விரைவுபடுத்த வேண்டும்.
ஏற்கனவே, உலக வங்கி இதற்காக பல திட்டங்களில் இந்தியாவுடன் இணைந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதன் பலன்கள் வரும் மாதங்களில் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.