அமராவதி: ஆந்திராவில் கடந்த 2014-19ம் ஆண்டு சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் இருந்தபோது, அரசு செயலாளர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், நீதிபதிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு தனி கட்டிடம் கட்டும் பணியை மேற்கொண்டது.
இந்நிலையில், 2019ல் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தது.இதையடுத்து, கட்டுமான பணிகள் பாதியில் கைவிடப்பட்டது.
தற்போது தெலுங்கு தேசம் கட்சி பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில், கைவிடப்பட்ட அந்த கட்டிடங்களை கட்டி முடிக்க சந்திரபாபு நாயுடு அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், கட்டுமான பணியை தொடங்கும் முன், ஐஐடி மெட்ராஸ் மற்றும் ஐஐடி ஹைதராபாத் நிபுணர்கள் குழு மூலம் கட்டிடங்களின் சொத்துக்களை சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதில், அமராவதி அரசு வளாகத்தில் உள்ள கட்டடங்களின் உறுதித்தன்மையை ஐஐடி மெட்ராஸ் குழுவினரும், எம்எல்ஏ, எம்எல்சி, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான கட்டடங்களை ஐஐடி ஐதராபாத் குழுவினரும் சோதனை செய்வார்கள்.