பெங்களூரு: மாநிலத்தில் உள்ள 250 அங்கன்வாடிகளில் எல்கேஜி-யுகேஜி பாடங்கள் வரும் 22ம் தேதி முதல் தொடங்கப்படும் என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
மாநிலத்தில், 250 அங்கன்வாடிகளில், 22ம் தேதி முதல், எல்.கே.ஜி., – யு.கே.ஜி., பாடங்கள் துவங்குகின்றன. குழந்தைகள் நலத்துறை சார்பில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், பைகள் மற்றும் சீருடைகள் வழங்கப்படும்.
மேலும், அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஆயுள் காப்பீட்டு திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். ஏற்கனவே, மாணவர்களுக்கு சத்தான உணவும், ஆசிரியர்களுக்கு சேலையும் வழங்கப்பட்டு வருகிறது.
அங்கன்வாடி ஆசிரியர்களை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை. 30 ஆண்டுகளுக்கும் மேலான, அங்கன்வாடி மையங்கள் மேம்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.