ஏர் இந்தியா நிறுவனம் தனது ஏர்பஸ் ஏ350, போயிங் 787-9 மற்றும் ஏ321 நியோ விமானங்களில் வை-பை இணையதள சேவையை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம், உள்நாட்டு விமானங்களில் இணைய சேவை வழங்கும் முதல் நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
விமானம் 10,000 அடி உயரத்தில் பறக்கும் போது பயணிகள் லேப்டாப், டேப்லட், மற்றும் ஸ்மார்ட்போன்களில் இணைய சேவையை பயன்படுத்த முடியும். ஒரே நேரத்தில் பல கருவிகளில் இந்த வசதியை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா வாடிக்கையாளர் அனுபவ அதிகாரி ராஜேஷ் டோக்ரா, “இணைய வசதி பயணத்தின் முக்கிய பகுதியாக மாறி விட்டது. இது பொழுதுபோக்கு மற்றும் பணிக்கான தேவைகளை பூர்த்தி செய்யும்” என்று கூறினார்.
இந்த புதிய சேவையை பயணிகள் உற்சாகமாக ஏற்றுக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.