இம்பால்: மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங் பேசிய ஆடியோ வெளியானதே அங்கு மீண்டும் கலவரம் வெடித்ததற்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆனால், இதை மணிப்பூர் அரசு மறுத்துள்ளது. மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்கின் பேச்சு தொடர்பான சர்ச்சைக்குரிய ஆடியோ சமீபத்தில் வெளியானது. இதனால் பழங்குடியினருக்கு தனி நிர்வாகம் கோரி மீண்டும் போராட்டங்கள் வெடித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், அந்த ஆடியோ விளக்கமளிக்கிறது என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த விளக்கத்தை பழங்குடியினர் ஏற்க மறுத்ததே தற்போதைய அமைதியின்மைக்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் குக்கி மற்றும் மெய்திஸ் சமூகத்தினருக்கு இடையே ஒரு வருடத்திற்கும் மேலாக மோதல் நீடித்து வருகிறது. மணிப்பூரில் பல மாதங்களாக அமைதி நிலவிய நிலையில், சனிக்கிழமை குக்கி மற்றும் மைதே பிரிவினருக்கு இடையே மீண்டும் வன்முறை வெடித்தது. இதில், 6 பேர் பலியாகினர்.
இந்த பரபரப்பான சூழலுக்குப் பிறகு, மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங், ஆளுநர் எல்.ஆச்சார்யாவை சந்தித்து விளக்கம் அளித்தார். தற்போது நிலவும் அமைதியின்மை குறித்து மணிப்பூர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் (உளவுத்துறை) கே கபீப் கூறுகையில், “கடந்த வெள்ளிக்கிழமை, அடையாளம் தெரியாத சில தீவிரவாதிகள் நீண்ட தூர ராக்கெட் தாக்குதலை நடத்தியதை அடுத்து மீண்டும் வன்முறை வெடித்தது.
இதில், 6 பேர் உயிரிழந்தனர். வன்முறைப் பகுதிகள், மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகள் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இராணுவ முகாம்களில் ஆயுதங்களை கொள்ளையடிக்கும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
92 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு 129 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கபீப் கூறினார்.