புதுடெல்லி: விண்வெளியில் தாவரங்களை வளர்ப்பது குறித்த ஆராய்ச்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட்டில் அனுப்பப்பட்ட காராமணி விதைகள் 4 நாட்களில் முளைத்துவிட்டன.
இஸ்ரோவின் பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் ஆந்திராவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் ஏவுதளத்தில் இருந்து டிசம்பர் 30ஆம் தேதி இரவு 10:00 மணிக்கு புறப்பட்டது. 15 நிமிடங்களில் ஸ்பேடெக்ஸ்-பி செயற்கைக்கோளை 476.84 கிமீ சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது. அதனுடன் ஸ்பேடெக்ஸ்-ஏ செயற்கைக்கோள் 476.87 கிமீ உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டது.
விண்வெளியில் தாவரங்களை வளர்ப்பது குறித்த ஆராய்ச்சியை மேற்கொள்ளும் நோக்கில் இஸ்ரோ விஞ்ஞானிகள் பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட்டில் காராமணி விதைகளை அனுப்பியுள்ளனர். ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட காராமணி விதைகள் ஏவப்பட்ட 4 நாட்களில் துளிர்விட்டன.
இஸ்ரோ சமீபத்தில் ஜனவரி 4, 2025 அன்று சமூக ஊடகங்களில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டது. அதில், “விண்வெளியில் தாவரங்களை வளர்ப்பது குறித்த ஆராய்ச்சிக்காக, PSLV-C60 ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட காராமணி விதைகள் 4 நாட்களுக்குள் முளைத்துள்ளன; இலைகள் தோன்றும் என்று எதிர்பார்க்கிறோம். விரைவில்.”