ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவர் நீதா அம்பானி, 50 அல்லது 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார். சர்வதேச மகளிர் தினத்தன்று, ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டு, தனது கால்களுக்கு உடற்பயிற்சி செய்வது தனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று என்று கூறினார்.

மேலும், ஒவ்வொரு நாளும் தனது உடல் வலிமையை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவதாகவும், “61 வயதில் உடற்பயிற்சி செய்ய முடிந்தால், இளைஞர்களால் ஏன் முடியாது?” என்றும் அவர் கேட்டார்.
மேலும், வலுவான பெண்கள் இயக்கத்திற்கு நீடா அம்பானி அழைப்பு விடுத்துள்ளார். உடற்பயிற்சி தன்னை நிம்மதியாக உணர வைக்கிறது என்றும், அதன் மூலம் நாள் முழுவதும் நேர்மறையாக உணர்கிறேன் என்றும் அவர் கூறினார்.