விசாகப்பட்டினம்: ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் வாகனம் சென்றதால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் ஜேஇஇ தேர்வை தவறவிட்டதாக 30 மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். என்ஐடி கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக நடத்தப்படும் ஜேஇஇ நுழைவுத் தேர்வை எழுதுவதற்காக பெண்டுர்தி ஏஐ டிஜிட்டல் ஜேஇ அட்வான்ஸ் பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த 30 மாணவர்கள் நேற்று காலை விசாகப்பட்டினம் புறப்பட்டனர்.
அப்போது அந்த வழியாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் வாகன வரிசை சென்றதால் போக்குவரத்து போலீசார் நீண்ட நேரம் பொது சாலையில் வாகனங்களை நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், மாணவர்கள் தேர்வு மையத்திற்கு வர தாமதமாகிறது. இதனால் தேர்வு மைய அதிகாரிகள் தங்களை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை என 30 மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தேர்வெழுத முடியாத மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், “எங்கள் குழந்தைகள் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்ததால் தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு வேறு நாளில் மீண்டும் தேர்வை நடத்துவது குறித்து துணை முதல்வர் பவன் கல்யாண் பரிசீலிக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளனர். அனைத்திந்திய மாணவர் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்வு நேரத்தில் திறமையற்ற போக்குவரத்து நிர்வாகத்தால் மாணவர்கள் தேர்வெழுதும் வாய்ப்பை இழந்துள்ளனர். எதிர்க்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் கார்த்திக் யெல்லபிரகடா, “இந்த மாநிலத்திற்கு ஒரு நல்ல அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் தேவை.
நடிகர்/அரசியல்வாதி, தனது சினிமா இமேஜுக்கு உண்மையாக இருப்பவர், தொடர்ந்து பொதுமக்களை ஒரு செய்திக்குறிப்பு நிகழ்வைப் போல நடத்துகிறார். சினிமா தருணங்களை கைதட்டுவதை நிறுத்திவிட்டு உண்மையான பொறுப்புணர்வைக் கோரத் தொடங்க வேண்டிய நேரம் இது.”