சென்னை: இந்தியா மற்றும் ரஷ்யா கடற்படைகளின் கூட்டுப் பயிற்சிக்காக ரஷ்ய போர் கப்பல்கள் சென்னை துறைமுகத்திற்கு வந்துள்ளன. இரு நாடுகளிடையேயான இந்த கூட்டுப் பயிற்சி 2003ஆம் ஆண்டில் இந்தியாவின் மேற்கு கடற்கரையில் முதன்முதலாக நடைபெற்றது. அதன் பிறகு, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியா மற்றும் ரஷ்யா கடற்படையினர் இணைந்து கடற்படை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ஆண்டு, இந்த கூட்டுப் பயிற்சி சென்னையின் கடற்கரை பகுதிகளில் நடத்தப்படுவதற்கான திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, ரஷ்யா கடற்படையின் பசுபிக் பெருங்கடல் அணியின் கப்பல்கள் சென்னை துறைமுகத்திற்கு வந்துள்ளன. இந்த பயிற்சி இரு கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்டமாக, இரு நாடுகளின் கடற்படை அதிகாரிகள் இரண்டு நாட்கள் இணைந்து செயல்படும் விதத்தில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதில் விளையாட்டு, போட்டிகள் மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு செயல்பாடுகள் இடம்பெற உள்ளன.
இரண்டாம் கட்டமாக, அடுத்த வாரம், இரு நாட்களுக்கு உள்ள கப்பல்களும் வங்களா விரிகுடா கடலில் பயிற்சியில் ஈடுபட உள்ளன. இந்திய கடற்படை சார்பில், 1970-80களில் வடிவமைக்கப்பட்ட 61 எம்.இ. கப்பல் இந்த பயிற்சியில் ஈடுபடவுள்ளது.