டெல்லி: பிரபல உணவு விநியோக நிறுவனமான ஜொமேட்டோ எடர்னல் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு புதிய லோகோ வெளியிடப்பட்டுள்ளது. ஜொமேட்டோ இன் இயக்குநர்கள் குழு இந்த நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது என்று நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் CEO தீபிந்தர் கோயல் கூறினார்.
ஜொமேட்டோ பங்குதாரர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில், ஜொமேட்டோ .com என்ற இணையதளத்தின் முகவரியும் eternal.com என மாற்றப்பட்டுள்ளது. அவர் தனது கடிதத்தில், அதாவது ஆரம்பமும் முடிவும் இல்லாத நித்தியம் ஒரு சக்திவாய்ந்த பெயர் என்றும் இது ஒரு பெயர் மாற்றம் மட்டுமல்ல, நோக்கத்தின் அறிவிப்பு என்றும் அவர் கூறினார்.

ஜொமேட்டோ, Blinkit, District மற்றும் Hyperpure ஆகிய நான்கு முக்கிய வணிகங்களை Eternal உள்ளடக்கியது என்றும் அவர் கூறினார். உணவு டெலிவரி பிராண்ட் மற்றும் ஆப்பில் இருந்து நிறுவனத்தை வேறுபடுத்துவதே இந்த திடீர் முடிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.