புதுடில்லி: பெங்காலி பெண்கள் மற்ற கொண்டாட்டத்தை விட இந்த துர்கா பூஜை கொண்டாட்டத்திற்கு தங்களது அழகுக்கு அதிகமாகவே முக்கியத்துவம் கொடுப்பர். உங்களுடைய ஆடைகளுக்கு தகுந்த மாதிரி ஜூவல்லரி அணிவதும் உங்கள் அழகில் மிகவும் முக்கியம். நம்முடைய பாரம்பரிய ஜூவல்லரியை காட்டிலும் ஜங்க் ஜூவல்லரி புதிய ட்ரெண்ட்டாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
இந்த ஜூவல்லரி நிறைய நன்மைகளையும் கொண்டுள்ளது. இது மிகவும் லேசாக, எடுத்து செல்ல சுலபமாக, குறைந்த விலையுடனும் இருப்பதால் இது அதிகமாக திருடு போகவும் வாய்ப்பில்லை. சரி வாங்க உங்கள் ஆடைகளுக்கு தகுந்த வெவ்வேறு வகையான ஜங்க் ஜூவல்லரி பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆப்கானி ஜூவல்லரி தான் துர்கா பூஜைக்கான டாப் ஜூவல்லரியாக இருக்கிறது. இது வெறும் ட்ரெண்ட்டாக மட்டும் இல்லாமல் பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும். கிளாசிக் லுக்குடன் லேசான கனத்துடனும் இருக்கும். இந்த துர்கா பூஜைக்கு இந்த ஜூவல்லரியை கண்டிப்பாக வாங்கிக் கொள்ளுங்கள்.
ட்ரைபல் ஜூவல்லரி பெங்காலி பெண்களுக்கு மிகவும் பிடித்தமான நகை ஆகும். போகிமியான் ஸ்டைலான ஆடைகளுக்கு இந்த ஜூவல்லரி பொருத்தமாக இருக்கும். இது சான்தினிகீட்டான் ஸ்டைலில் அட்டகாசமான அழகை கொடுக்கும். இந்த ஸ்டைல் தான் பெரும்பாலான பெங்காலி பெண்கள் ஆசைப்படுவர்.
டெரஹோட்டா ஆர்ட் ஜூவல்லரி பெங்காலிகளின் பாரம்பரிய வடிவமைப்பு பெற்ற ஜூவல்லரி ஆகும். அதில் வடிவமைக்கப்பட்ட டிசைனால் பெங்காலி பெண்கள் அதை விரும்பி அணிகின்றனர். இது உங்கள் துர்கா பூஜைக்கான முதன்மையான ஜூவல்லரி ஆகும். போகிமியான் அல்லது உங்கள் பாரம்பரிய ஆடைகளுக்கு இந்த டெரஹோட்டா ஜூவல்லரி பொருத்தமாக இருக்கும். இதில் கலர்புல்லான ஜூவல்லரி என்றால் நீங்களும் கலர்புல்லாக மாறிவிடுவீர்கள்.