திருவனந்தபுரம்: வயநாட்டில் மீட்புப் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். இதுகுறித்து பினராயி விஜயன் கூறியதாவது: நிலச்சரிவில் சிக்கியவர்களில் 206 பேரை காணவில்லை. 215 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
83 பேர் வயநாடு, கோழிக்கோடு மற்றும் மலப்புரா மாவட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 10,042 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பேரிடர் முன்னெச்சரிக்கை அமைப்புகளை மறுபரிசீலனை செய்து காலநிலைக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க வேண்டும்.
மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் சூரமலையில் சிறப்பு நகர்மன்றம் அமைக்கப்படும். அங்கு 100 வீடுகள் கட்டித் தரப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார். மேலும் வீடுகளை இழந்தவர்களுக்கு 100 வீடுகள் கட்டித் தருவதாக கர்நாடக முதல்வர் அறிவித்துள்ளார்.
பேரிடர் மீட்பு நிவாரணப் பணிகளை UPI ஐடி மற்றும் நெட் பேங்கிங் மூலம் அனுப்பலாம். இவ்வாறு அவர் கூறினார்.