புதுடெல்லி: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (UTT) சீசன் 6-ல் கொல்கத்தா தண்டர்பிளேட்ஸ் புதிய உரிமையாளராக இணைந்துள்ளது. அல்டிமேட் டேபிள் டென்னிஸ் சீசன் 6 போட்டிகள் அகமதாபாத்தில் மே 29 முதல் ஜூன் 15 வரை நடைபெறவுள்ளது. இந்த டேபிள் டென்னிஸ் போட்டி அகமதாபாத்தில் நடைபெறுவது இதுவே முதல் முறை.

இந்நிலையில், இந்த சீசனில் முதன்முறையாக யுனிகாப் குழுமம் மற்றும் எம்விகாஸ் குழுமம் இணைந்துள்ள கொல்கத்தா தண்டர்பிளேட்ஸ் இணைந்துள்ளது. கூடுதலாக, PPG அணி இந்த சீசனில் புனே ஜாகுவார்ஸ் என்ற புதிய பெயரில் களத்தில் இறங்கவுள்ளது.
கடந்த 2023 மற்றும் 2024 யுடிடி சீசன்களில் கோவா சேலஞ்சர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.