ஆகஸ்ட் மாதத்திற்குள் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி கவிழும் என லாலு பிரசாத் கூறியதற்கு மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் பதிலளித்துள்ளார். பீகார் தலைநகர் பாட்னாவில் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் (ஆர்ஜேடி) 28வது நிறுவன தினம் நேற்று நடைபெற்றது.
விழாவில் உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ.) அரசு பலவீனமாக உள்ளதாகவும், ஆகஸ்ட் மாதத்திற்குள் ஆட்சியில் இருந்து விழும் என்றும் கூறினார். மேலும், கடந்த 27 ஆண்டுகளில் ராஷ்டிரிய ஜனதா தளம் பல ஏற்ற தாழ்வுகளை கண்டுள்ளதாகவும், அதன் காரணமாக அவர்கள் பலம் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
தேர்தலை எப்போது வேண்டுமானாலும் நடத்தலாம் என்றும், ஆகஸ்ட் மாதத்திற்குள் மோடி தலைமையிலான மத்திய அரசு கவிழும் என்பதால், தேர்தலை சந்திக்க அனைத்து கட்சி தொண்டர்களும், தலைவர்களும் தயாராக இருக்க வேண்டும் என்றும் லாலு பிரசாத் யாதவ் கேட்டுக் கொண்டார்.