ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்குப் பிறகு, பாதுகாப்புப் படைகள் மற்றும் ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பந்திபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை தகவல் வழங்கியது. இதையடுத்து, காஷ்மீர் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் இறங்கினர். இதில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் முன்னணி தளபதி அல்தாப் லல்லி பாதுகாப்பு படையினரால் நடத்திய என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
இதற்கிடையே, பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் காஷ்மீர் சேர்ந்த பயங்கரவாதிகள் அடில் மற்றும் ஆசிப்பின் வீடுகளை இந்திய ராணுவம் வெடி வைத்து தகர்த்தது குறிப்பிடத்தக்கது.