புதுடெல்லி: நேபாளத்தின் புதிய பிரதமர் சர்மாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நேபாள நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் பிரசாந்தா தோல்வியடைந்தார். இதையடுத்து, ஜனாதிபதியை சந்தித்த கே.பி.சர்மா ஒலி, தனது தலைமையில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இந்நிலையில், நேபாளத்தின் புதிய பிரதமராக சர்மா ஒலி இன்று (ஜூலை 15) பதவியேற்றார்.
இது குறித்து பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நேபாளத்தின் புதிய பிரதமர் சர்மாவுக்கு வாழ்த்துகள். இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த வேண்டும். நமது மக்களின் முன்னேற்றம் மற்றும் செழிப்புக்காக நமது பரஸ்பர உறவு நன்மை பயக்கும். ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த வேண்டும். இவ்வாறு மோடி கூறினார்.
கே.பி.க்கு பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளார். நான்காவது முறையாக நேபாளத்தின் பிரதமராக சர்மா ஒலி நியமிக்கப்பட்டுள்ளார். X இல் ஒரு பதிவில், இருதரப்பு உறவை ஆழப்படுத்துவதற்கும், பரஸ்பர முன்னேற்றம் மற்றும் செழுமைக்காக இந்தியா மற்றும் நேபாளம் இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் மோடி தனது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தினார்.