பொது போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும், கூட்டுறவு அமைச்சருமான நிதின் கட்கரி, லைவ்-இன் உறவுகள் மற்றும் ஒரேலிங்க திருமணங்களை “சமூக விதிகளுக்கு எதிரானது” என்று கூறி, அவை சமூக அமைப்பை அழிக்கும் என எச்சரித்தார்.
ஒரு யூடியூப் நேர்காணலில் பத்திரிகையாளருடன் பேசும் போதே, இந்த
கருத்துகளை வெளியிட்ட அவர், “இந்த தகவல்கள் சமுதாயத்தின் மீது விளைவிக்கும் தாக்கங்களை நாம் எண்ண வேண்டும். குழந்தைகள் எவ்வாறு பிறப்பார்கள், அவர்களின் எதிர்காலம் என்ன?” என்று கேள்வி எழுப்பினார்.

இதை தொடர்ந்து, கட்கரி, “சமூக வாழ்க்கையை முறியடிக்கும்போது அது எவ்வாறு மக்கள் மீது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை யோசிக்க வேண்டும்” என்றார்.
பார்லிமென்டிற்காக பிரிட்டன் சென்றிருந்தபோது, பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து, ‘உங்கள் நாட்டில் உள்ள மிகப்பெரிய பிரச்னை என்ன?’ என, கேட்டேன். இளைய தலைமுறையினர் திருமணம் செய்து கொள்ளவில்லை’ என்றார்கள்.
சமூக அமைப்பு நிலைத்திருப்பதற்கான காரணங்களை விளக்கிய அவர், “இந்தச் சமுதாயத்தில் ஆண், பெண் விகிதாச்சாரம் உள்ளது. நாளை 1,500 பெண்களும் 1,000 ஆண்களும் இருந்தால், ஆண்களுக்கு இரண்டு மனைவிகளைக் கொடுக்க வேண்டும்.”
மேலும், “ஒரே பாலின திருமணங்கள் சமூக ஒழுங்கை சீர்குலைக்கின்றன” என்றார்.