டெல்லி: யுஜிசியின் புதிய வரைவு விதிகள் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் கூட்டாட்சிக் கொள்கைக்கு எதிரானவை என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மகுவா மொய்த்ரா மக்களவையில் கண்டனம் தெரிவித்துள்ளார். இதில் பேசிய அவர், 2025-ம் ஆண்டுக்கான யுஜிசி வரைவு விதிகளை எதிர்ப்பதாகவும், 2018-ம் ஆண்டுக்கான யுஜிசி விதிகளுக்கு பதிலாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வரைவு விதிகளை எதிர்ப்பதாகவும் தெரிவித்தார்.
மகுவா மொய்த்ரா, யுஜிசியின் புதிய வரைவு விதிகள் மத்திய அரசின் கைகளில் அதிகாரம் குவிவதற்கு வழிவகுக்கும் என்று கண்டனம் தெரிவித்தார். யுஜிசியின் புதிய வரைவு விதிகள் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் கூட்டாட்சிக் கொள்கைக்கு எதிரானது. புதிய யுஜிசி வரைவு விதிகளை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
புதிய வரைவு விதிகளில், துணைவேந்தர் நியமனத்துக்கான தேடல் குழு அமைக்கும் நடைமுறையை மாற்ற முயற்சிக்கின்றனர். புதிய யுஜிசி வரைவு விதிகள் தேடல் குழுவில் மாநில அரசின் பிரதிநிதியை அனுமதிக்கவில்லை என்று துணைவேந்தர் கூறினார்.