பிரபல மலையாள நடிகர் தர்மஜன். அந்தோணி, அச்சேயன்ஸ், கோதா, டிரான்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர் அமர் அக்பர்.
சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார். இவர் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு அனுஜாவை காதலித்து வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
அந்த திருமணம் பதிவு செய்யப்படவில்லை. இதனால் தற்போது மகள்கள் முன்னிலையில் மறுமணம் செய்து கொண்டுள்ளனர். தங்கள் மகள்களின் எதிர்காலத்திற்காக இந்த திருமணத்தை பதிவு செய்துள்ளோம் என்றனர்.
இதையடுத்து இந்த ஜோடிக்கு ரசிகர்களும், திரையுலகினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.